30 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பிரத்யேக கண்ணாடிகள் மூலம் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

அரிய வானியல் நிகழ்வான வளைய வடிவிலான சூரிய கிரகணம் இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கியது.

இதன்படி சூரியனை நிலவு மறைக்கும் நிகழ்வு சிறிது சிறிதாக அரங்கேறியது.

சுமார் 9.35 மணி அளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தது. 3 நிமிடங்களுக்கு முழு கிரகண வடிவம் நிலை பெற்றிருந்தது. 

அதற்கு பிறகு நிலவு சூரியனை முழுமையாக மறைக்காமல் அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைத்தது.

இதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றியது.

இந்த கிரகணம் முற்பகல் 11.19 மணி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில், இந்திய நேரப்படி சுமார் காலை 9 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை காண முடிந்தது.

அப்போது சூரியனை, நிலவு முழுவதும் மறைத்ததால் நெருப்பு வளையம் போல் காட்சியளித்ததை அனைவரும் கண்டு ரசித்தனர்.

கோவை, உதகை, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரணத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை காண முடியாமல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே