இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர்

நிர்பயா நிதியை கொண்டு தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளான இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த ஏழு குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்து பரிசுப்பொருட்களை வழங்கினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனிற்கு அதிமுக அரசு வட்டிக்கட்டி வருவதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே