கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தினந்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவா மாநில முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தனது சுட்டுரையில் அவர் “அறிகுறிகள் இல்லை எனினும் நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். தொடர்ந்து வீட்டில் இருந்து எனது கடமையை மேற்கொள்வேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த நாள்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு முதல்வர் சாவந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே