கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 298 உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய, மாநில அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பெரிய பெரிய திரையரங்குகள், மால்கள் , நட்சத்திர விடுதிகள் , சுற்றுலா தளம் என மக்கள் கூட கூடிய அனைத்துக்கும் தடை விதித்துள்ள மத்திய அரசு, நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. 

அதற்கான ஆயத்த பணிகளில் மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாஹோவில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் புதுச்சேரியிலும் 144 தடை அமலாகிறது.

புதுச்சேரி கடற்கரை சாலை வரும் 31-ம் தேதி வரை மூடப்படும். அத்தியாவவரையிலும் வாங்கி கொள்ளலாம்.

நாளை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே