மக்கள் ஊரடங்கு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட வீடியோ…

உலக நாயகன் கமல்ஹாசன், ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் தனுஷும் மக்கள் ஊரடங்கு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தவும், கூடுதலாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும், நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, என்றும், மாலை 5 மணிக்கு, ஜன்னல் மற்றும் வீட்டு வாசலில் நின்று, கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை பாராட்டும் வகையில் அனைவரும் கைகளை தட்டவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனை வலியுறுத்தி பல பிரபலங்களும் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் #jantacurfew என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Actor Dhanush’s video on Jantacurfew

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் ஊரடங்கு குறித்து வலியுறுத்தி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளைஞர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காது என நினைத்து, தேவையில்லாமல் ஊர் சுற்றி வருகின்ற தகவல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது.

இளைஞர்கள் கொரோனா வைரஸ் நோய் தாக்கி அதிகமாக இறக்கவில்லை என்றாலும், நீங்கள் மற்றவர்களுக்கு, அந்த நோயை பரப்பும் கருவிகளாக மாறி வருகிறீர்கள், அதனால், தேவையில்லாமல் பொது வெளியில் நடமாடுவதை தவிர்த்து விடுங்கள்.

தங்களது உயிரை பணயம் வைத்து, கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என பேசியுள்ளார்.

அவரது இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே