செகந்திராபாத்தில் தீ விபத்து – 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

தெலுங்கானா; மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயைணப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போய்குடா பகுதியில் உள்ள மரப்பொருள்கள் குடோன் ஒன்றில் இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் மரப்பொருள்கள் குடோனிலேயே தங்கி வேலை பார்த்து வந்த கூலித் தொழிலாளர்களில் 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடோனில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே