சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 2ஆவது நாளாக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.102.91க்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.92.95-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் 52 காசுகளும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

125 நாட்களுக்கும் மேலாக அதிகரிக்காமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே