ஆக.10ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…!!

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் தேர்வு நடத்தும் சூழல் ஏற்படாததால் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வருகிற திங்கட்கிழமை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு செல்போன் எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே