குற்ற வழக்கில் சிக்கிய வாகனங்கள்..; குறைந்த விலைக்கு ஏலம்..!!

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீண்ட நாட்களாக உரிமை கோராமல் இருந்த இரு சக்கர வாகனங்களை ஏலத்தில் எடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.

நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் தெருக்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை நீண்ட நாட்களாக யாரும் உரிமம் கோராமல் இருந்து வருவதால் அந்த வாகனங்களை ஏலம் விட காவல்துறை முடிவு செய்தது .

இதன்படி நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் 414 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. நாளையும் (16.10.20) ஏலம் நடைபெறுகிறது.

நெல்லை மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையர் மகேஷ் குமார் தலைமையில் ஏலம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர்.

குறைந்தபட்ச ஏலத்தொகையாக 500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது, இதில் அதிகபட்சமாக ஒரு இரு சக்கர வாகனம் 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.

கூட்டம் அதிக அளவில் வந்ததால் ஏலத்திற்கு 300 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கருவூலத்தில் செலுத்த உள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே