சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் 10 பேர் நியமனம்..!!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் ராஜீந்தர் காஷ்யப் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் பதவியேற்க உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே