தமிழகத்தில் 8ம் தேதி முதல் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே..!!

சென்னை எழும்பூர் – மன்னார்குடி 06179 இடையே டிசம்பர் 8 முதல் தினசரி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே போல் மன்னார்குடி –  எழும்பூர் 06180 டிசம்பர் 9 முதல் தினசரி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்த ரயில் இரவு 22.15-க்கு மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 05.25 மணிக்கு மன்னார்குடி ரயில் நிலையம் சென்றடையும்.

அதேபோல் மன்னார்குடியில் இரவு 22.30-க்கு கிளம்பி மறுநாள் காலை 5.55-க்கு எழும்பூர் வந்தடையும்.

மேலும் இந்த ரயில் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையம் -திருவனந்தபுரம் 02695 விரைவு ரயில் சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் 15.20-க்கு கிளம்பி மறுநாள் காலை 07.50-க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் திருவனந்தபுரம் – எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் மாலை 17.15-க்கு கிளம்பி மறுநாள் காலை 10.00 மணிக்கு எம்ஜிஆர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, வாணியம்பாடி, ஜோலாரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலகேட், திருச்சூர், எர்ணாகுளம், கொட்டையம், சேங்கன்சேரி, திருவலா, செங்கானூர்., கொல்லம், வார்கலா வழியாக செல்லும்.

சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையம் – மங்களூரு 026895 விரைவு ரயில் சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் 17.00-க்கு கிளம்பி மறுநாள் காலை 09.00-க்கு மங்களூரு ரயில் நிலையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மங்களூரு – எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் மாலை 16.35-க்கு கிளம்பி மறுநாள் காலை 08.00 மணிக்கு எம்ஜிஆர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.

இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், வழியாக செல்லும்.

சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து பாலாகாடு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையம் -திருவனந்தபுரம் 02651 விரைவு ரயில் சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் 21.10-க்கு கிளம்பி மறுநாள் காலை 10.10-க்கு பாலாகாடு சென்றடையும்.

அதேபோல் மாலை 15.35-க்கு 02652 பாலாகாடு ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 05.35 மணிக்கு எம்ஜிஆர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.

இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாணியம்பாடி, ஜோலாரப்பேட்டை, சேலம், நாமக்கல், மோகனூர், கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.

மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

மங்களூரு – திருவனந்தபுரம் 06603 விரைவு ரயில் மங்களூருர் ரயில் நிலையத்தில் 17.10-க்கு கிளம்பி மறுநாள் காலை 06.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

அதேபோல் மாலை 19.25-க்கு 06604 திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 07.50 மணிக்கு மங்களூரு ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கோவை-நாகர்கோவில் 02668 விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் 19.30-க்கு கிளம்பி மறுநாள் காலை 05.05-க்கு நாகர்கோவில் சென்றடையும்.

அதேபோல் மாலை 21.45-க்கு 02667 நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 07.15 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர்-குருவாயூர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

எழும்பூர்-குருவாயூர் 06127 விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 08.25-க்கு கிளம்பி அன்று மாலை 06.40-க்கு குருவாயூர் சென்றடையும்.

அதேபோல் மாலை 21.30-க்கு 06128 குருவாயூர் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் மாலை 20.35 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் 06851 விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 19.15-க்கு கிளம்பி மறுநாள் காலை 08.30-க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

அதேபோல் மாலை 17.10-க்கு 06852 ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 06.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் 06063 விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 18.55-க்கு கிளம்பி மறுநாள் காலை 07.30-க்கு நாகர்கோவில் சென்றடையும்.

அதேபோல் மாலை 16.15-க்கு 06064 நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 04.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே