நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட வருகை தர இருந்த மத்திய குழுவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த26ம் தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தது.

இதன்காரணமாக கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நவடிக்கைகாரணமாக உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சேத மதிப்பை பார்வையிடுவதற்காக மத்திய குழு ஒன்று இன்று (1 ம் தேதி வருகை தருவதாக இருந்தது.

இதனிடையே வங்க கடலில் உருவாகி உள்ள மற்றொரு புயல் காரணமாக மத்தியகுழுவின் வருகை டிச.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே