ரயில்வே பாதுகாப்புப் படையில் 10,500 பணியிடங்கள் நிரம்பின

நாட்டின் மிகப்பெரிய பணி அமர்த்தல் நடவடிக்கையாக, ரயில்வே பாதுகாப்புப் படையில் 10 ஆயிரத்து 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ரயில்வே பாதுகாப்புப் படையில் 1,120 துணை ஆய்வாளர்கள், 8 ஆயிரத்து 619 போலீஸ் கான்ஸ்டபிள்கள், 798 உதவி ஊழியர்கள் என ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 537 இடங்கள் காலியாக இருந்தன.

காலியிடங்களை நிரப்பும் பணி கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது.

மொத்தம் 82 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

1,120 துணை ஆய்வாளர் பணியிடத்துக்கு மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருந்தன.

கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 59 லட்சம் விண்ணப்பங்களும்,

துணை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு 9 லட்சம் பேரும் விண்ணப்பித்தனர்.

400 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துணை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு 819 ஆண்களும், 301 பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

8 ஆயிரத்து 619 கான்ஸ்டபிள் பணியிடங்களில் 4,403 பேர் ஆண்கள், 4,216 பேர் பெண்கள்.

உடல்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு முடிந்தது. ஒட்டுமொத்த பணித்தேர்வு முறை அனைத்தும் கணினி முறையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே