ஹஜ் புனித பயணத்திற்காக சவுதி அரேபியா சென்றவர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை என தமிழ்நாடு ஹஜ் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டியினர் நேரில் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஹஜ் கமிட்டியினர், தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4 ஆயிரத்து 627 பேர் சென்றதாக தெரிவித்தனர். 5பேர் உடல்நலக்குறைவால் அங்கேயே உயிர் இழந்து விட்டதாகவும், 22 பேர் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும் தெரிவித்தனர்.
மீதமுள்ள 4 ஆயிரத்து 600 பேரில் முதல் கட்டமாக 427 பெயர் தமிழகம் இருப்பதாக தெரிவித்தனர். மதினாவில் தாங்கும் இடத்தில் போதிய வசதி இல்லாமல் அசௌகரியம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் ஹஜ் கமிட்டியினர், “பெரும்பான்மையான பயணிகள் அங்கிருந்து எங்களுக்கு தங்களுடைய செல்போன் மூலமாக, மெசேஜ் மூலமாக எங்களுக்கு சொல்லி கொண்டே இருக்கிறார்கள், இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் ஏற்பாடுகள் மிக மிக மோசமாக இருந்தது என்றும் இதனை நாங்கள் மத்திய அரசின் மூலமாக சவுதி அரசாங்கத்திற்கு எங்களுடைய வருத்தத்தை தெரிவிக்க இருக்கின்றோம்” எனவும் கூறினர்.