கனடா நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் முடிவுக்கு ஒப்புதல்

கனடா நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் உத்தரவிற்கு அந்த நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் தலைமையிலான அரசின் மீது கடந்த பிப்ரவரியில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

பொறியியல் நிறுவனத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு பற்றிய வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்படுத்திக்கொள்ள அந்நாட்டின் அட்டோனி ஜெனரல் ஆன வில்சனுக்கும், பிரதமர் ட்ரூடோ மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தவர்கள் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதனால் அரசின் உயர் மட்டத்தில் இருந்த பலர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்நிலையில் ட்ரூடோ நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க முடிவெடுத்தார். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து இருந்தது. சமீபத்திய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவைவிட சற்று அதிகம் இருந்தது. எனினும் ஊழல் குற்றச்சாட்டுகளால் ட்ரூடோ அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் கனடா நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே