வெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை

கென்யாவில், வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரையின் புகைப்படம் வெளியானதை அடுத்து, அதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் விலங்கியல் பூங்காவுக்கு குவிந்து வருகின்றனர்.

அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் மரா)) என்ற தேசிய விலங்கியல் பூங்காவில், வெள்ளை நிற புள்ளிகளுடன் அரிய வகை குதிரை வளர்ந்து வருவதாக கூறி, அதுதொடர்பான புகைப்படத்தை அண்மையில் பூங்கா நிர்வாகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இதனை கண்டு ஆச்சரியப்பட்ட பலரும், அதனை நேரில் படம் பிடிக்க பூங்கா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தகவலை உண்மை என உறுதி செய்த சுற்றுலா வழிகாட்டியும், புகைப்பட கலைஞருமான ஆன்டனி டோரா என்பவர், இந்த அரிய வகை குதிரையை முதன் முதலில் பார்த்து, புகைப்படம் எடுத்தது தானே என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரிகளுக்கு பதில் குதிரையின் உடலில் வெள்ளை நிற புள்ளிகளை பார்த்தபோது, இடம்பெயர்வு நோக்கத்திற்காக அதன் மீது வண்ணம் தீட்டப்பட்டிருக்கலாம் என கருதியதாக தெரிவித்தார்.

மரபணு குறைபாடு காரணமாக குதிரைக்கு நிறமியில் மாற்றம் ஏற்பட்டு “பிஸுடோ மெலனின்” என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என ஆன்டனி தெரிவித்துள்ளார்.

தற்போது கென்யா விலங்கியல் சரணாலயத்தில் வளர்ந்து வரும் இந்த அரிய வகை குதிரையை காண உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வேன்களில் அங்கு சென்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே