கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (வெள்ளிக்கிழமை) 96 ஆயிரத்தை நெருங்கியது.

நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியது.

220-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது.

இதில், 192 நாடுகளில் அந்த நோய் பாதிப்பால் 95 ஆயிரத்து 735-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 16 லட்சத்து 4 ஆயிரத்து 718 பேர்களில் 48 ஆயிரத்து 953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய்த்தொற்றுக்கு

  • அமெரிக்காவில் 16,697 பேரும்,
  • இத்தாலியில் 18,279 பேரும்,
  • ஸ்பெயினில் 15,447 பேரும்,
  • பிரான்ஸில் 12,210 பேரும்,
  • இங்கிலாந்தில் 7,978 பேரும்,
  • ஜெர்மனியில் 2,607 பேரும்,
  • ஈரானில் 4,110 பேரும்,
  • சீனாவில் 3,335 பேரும்,
  • பெல்ஜியத்தில் 2,523 பேரும்,
  • நெதர்லாந்தில் 2,396 பேரும்,
  • பிரேசில் 941 பேரும்,
  • துருக்கியில் 908 பேரும்,
  • சுவிஸ்சர்லாந்தில் 948 பேரும்,
  • ஸ்வீடனில் 793 பேரும்,
  • கனடாவில் 504 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே