கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் இந்திய மூவர்ண தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகமே கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மேட்டர்ஹார்ன் மலைச் சிகரத்தில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு இரவும் வார்த்தைகள் அல்லது உருவங்கள் அடங்கிய ஒளிவடிவில் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சுவிட்சர்லாந்தின் கொடியுடன் தொடங்கிய ஒளிக்காட்சிகள், ‘நம்பிக்கை’, ‘ஒற்றுமை’, ‘வீட்டில் இருங்கள்’ போன்ற சொற்களும் ஒளிரப்பட்டன.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் இந்திய மூவர்ண தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது. 

இந்த புகைப்படத்தை இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, உலகமே கொரோனாவை ஒன்றாக எதிர்த்து போராடுகிறது.

நிச்சயமாக மனிதகுலம் இந்த தொற்றுநோயை வெல்லும்,’ என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே