ரூ.1,815 கோடியில் இல்லந்தோறும் இணையம் திட்டம் செயல்படுத்தப்படும்

110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம், 1,815 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ்  அறிவித்த இல்லந்தோறும் இணையம் என்ற திட்டத்தின் மூலம் அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே