முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சென்றார்

லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்கா இங்கிலாந்து துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு இலண்டன் சென்று அடைந்தார். அவர் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்-அமைச்சரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்திலும் தங்கியுள்ள ஹோட்டலிலும் வரவேற்க திரளான தமிழர்கள் வந்திருந்தனர். முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் அவர்கள் வரவேற்றனர்.

லண்டனில் இரவு தங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடுகிறார். லண்டன் கிங்ஸ் கல்லூரியை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பான ஒப்பந்தத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுகிறார். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே