மநீம, அமமுக கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டன

அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவிற்குட்பட்ட வெங்கரை, ஆர்வங்காடு, திடுமல் உள்ளிட்ட பகுதிகளில் 87 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம், அங்கன்வாடி மையம், மகளிர் சுகாதார வளாகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே