பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கொள்கையை முழங்கியவர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை போதித்தவர்.

அவரது 111 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றார். அப்போது அவருக்கு திமுக சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதையடுத்து அண்ணாவின் சிலைகள் வைக்கப்பட்டு இருந்த உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே