நாளை நடக்கிறது இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெஸ்ட் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது.

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தர்மசாலா சென்றடைந்தனர். அவர்களுக்கு அம்மாநில அதிகாரிகள் சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீரர்களுக்கும் மாலையுடன் தொப்பி அணிவிக்கப்பட்டது. வரவேற்பு அளிக்கப்பட்ட படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே