சச்சின், சேவாக், யுவராஜ் விளாசல்: பரபரப்பான போட்டியில் மே.இ.தீவுகளை வீழ்த்தி இறுதியில் இந்தியா லெஜண்ட்ஸ்

இந்தியா லெஜண்ட்ஸ் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தனது வழக்கமான மாஸ்டர் கிளாஸ் இன்னிங்சில் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் விளாசினார். இது இவரது தொடர்ச்சியான 2வது அரைசதமாகும். 47 வயதிலும் புல் ஷாட்டை அபாரமாக ஆடினார் சச்சின்.

ராய்பூரில் நேற்று நடைபெற்ற ரோடு சேஃப்டி டி20 தொடரின் அரையிறுதியில் பரபரப்பான போட்டியில் மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் அணியை இந்தியா லெஜண்ட்ஸ் அணி 12 ரன்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியில் கேப்டன் பிரையன் லாரா. முதலில் பேட் செய்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் ஏட்டிக்குப் போட்டியாக ஆடி ரன்கள் குவித்தது ஆனால் 206/6 என்று முடிந்தது.

இந்திய அணியில் சேவாக், சச்சின் தொடகக் வீரர்களாகக் களமிறங்கினர். இருவரும் 5.3 ஓவர்களில் 56 ரன்களை சேர்த்து அபாரத் தொடக்கம் கொடுத்தனர். சேவாக் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா லெஜண்ட்ஸ் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தனது வழக்கமான மாஸ்டர் கிளாஸ் இன்னிங்சில் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் விளாசினார். இது இவரது தொடர்ச்சியான 2வது அரைசதமாகும். 47 வயதிலும் புல் ஷாட்டை அபாரமாக ஆடினார் சச்சின். கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸுக்கு எதிராக 37 பந்துகளில் 60 ரன்கள் விளாசியிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர் 15வது ஓவரில் அவுட் ஆகும் போது ஸ்கோர் 140/3. இடையில் முகமது கைஃப் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 21 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார்.

140/3 என்ற நிலையிலிருந்து காட்டடி மன்னன் யூசுப் பத்தான் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுக்க, யுவராஜ் சிங் 20 பந்துகளில் 1 பவுண்டரி 6 பயங்கர சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து ஆட்டமிழக்காமல் 78 ரன்களை 5 ஓவர்களில் சேர்க்க இந்தியா லெஜண்ட்ஸ் 208/3 என்ற பெரிய ரன் எண்ணிக்கையை எட்டியது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியில் வில்லியம் பெர்கிங்ஸ் மன்பிரீத் கோனியிடம் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவைன் ஸ்மித் 9 பவுண்டரிகள் 2சிக்சர்களுடன் 36 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். நர்சிங் தியோநரைன் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். 11.2 ஓவர்களில் 120/3 என்று இருந்தது வெஸ்ட் இண்டீச் லெஜண்ட்ஸ், அதன் பிறகு லெஜண்ட் பிரையன் லாரா இறங்கி 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்குக் கொண்டு வந்தார். ஆனால் இவர் வினய் குமார் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற வெஸ்ட் இண்டீச் 206/6 என்று தோல்வி அடைந்தது.

இந்தியா லெஜண்ட்ஸ் அணி இறுதிக்குள் நுழைந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே