திமுக மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ரத்ததான செயலி

ரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக திமுக மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ரத்ததான செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர நேரங்களில் ரத்தம் தேவைப்படுபவர்கள் இந்த செயலியில் பதிவு செய்யலாம்.

மேலும் இந்த செயலி மூலம் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ரத்த தானம் செய்ய முன்வரலாம் என்றும் செயலி 24 மணிநேரமும் செயல்படும் வகையில் வல்லுநர்கள் தொடர்பில் இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட வகை ரத்தம் தேவைப்படுவோர் மற்றும் ரத்தம் தானம் செய்ய விரும்புவோரும் ‘DMK blood donation App’ என்ற குருதி தான செயலி மூலம் பயனடைய திமுக மருத்துவ அணி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தவது மிகவும் எளிது என தெரிவிக்கும் திமுக மருத்துவ அணி ரத்தம் தேவைப்படுவோர் மற்றும் ரத்த தானம் செய்ய விரும்புவோர் அவர்களது விவரங்களை செயலி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

அதனைத்தொடர்ந்து வல்லுநர்கள் பயனாளர்களை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை வழங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே