தஞ்சாவூரில் நூறு ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்களின் புகைப்பட கண்காட்சி

நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள், ஓவியங்கள், கையெழுத்து பிரதிகள் என இதுவரை 50 ஆயிரம் பொருட்களை தனி நபர்கள் பதிவு செய்துள்ளதாக தொல்லியல் துறை அலுவலர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவில் அர்த்த மண்டபத்தில், தொல்லியல் பொருட்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் தொல்பொருள் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு முகாம் தொடங்கியுள்ளது.

வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை பார்வையிட்ட தொல்லியல் துறை சென்னை சரக அலுவலர் காயத்ரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, நூறாண்டு பழமையான பொருட்கள் ஏதேனும் தனியாரிடம் இருக்குமாயின் அதனை உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இதன் மூலம் நாட்டின் எந்த பகுதிக்கும் பழமையான பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்வதோடு, அதில் மாற்றமும் செய்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

இதுவரை பழமையான ஓவியங்கள், கையெழுத்து பிரதிகள் என 50 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தொடர்ந்து தொல்லியல் பொருட்களின் பதிவு நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பான விழிப்புணர்வு முகாமும் கடந்த 13ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே