சென்னை அண்ணாசாலை 7 ஆண்டுகளுக்குப் பின் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக இன்றும் நாளையும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கப்பாதைப் பணிகள் நடைபெற்று வந்ததால், கடந்த 2012ம் ஆண்டு முதல் அண்ணா சாலையில் ஒருவழிப் போக்குவரத்து அமல்படுத்தப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இருவழிப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அண்ணா சிலையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி., டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.