சிவப்பு ரோஜாக்கள் கமல்தானே – அமைச்சர் காமராஜ்

நடிகர் விஜய் தனது புதிய படத்தின் விளம்பரத்திற்காக தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேளாண்துறை சார்பாக ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விதை சேமிப்பு கிடங்கு மற்றும் அதன் அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜிடம் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜயின் கருத்துக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், விஜயின் பேச்சு என்பது அவரது புதிய படத்தின் விளம்பரத்திற்கான பேச்சுதான் என்று கூறினார்.

இளம்பெண் சுபஸ்ரீ மரணம் என்பது தங்களை மிகப்பெரிய துக்கத்திற்கு ஆளாக்கி உள்ளதாகவும் அதில் எந்தவொரு மாற்று கருத்தும் கிடையாது என்றும் கூறினார்.

அதிமுக அரசை விமர்சிப்பவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், கமல் என்று செய்தியாளர்கள் கேட்டவுடன்  சிவப்பு ரோஜாக்கள் கமல்தானே என்று தனக்கு கேட்க தோன்றியதாகவும் கூறினார்.  

மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தான் வெற்றி பெறும் எனவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே