சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பதுபோல பரவும் காட்சிகள்..!

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற சட்டம் இருக்கும் நிலையில் 6 முதல் 10 வயது உள்ள இளம் சிறார்களுக்கு ஒருவர் மது ஊற்றிக் கொடுக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவனுக்கு மது ஊற்றி கொடுக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சுமார் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் மது ஊற்றிக் கொடுக்கும் காட்சியும், அதை அந்த சிறுவர்கள் வாங்கிக் கொடுக்கும் காட்சிகளும் தற்போது வேகமாக பரவி வருகின்றன.

இந்திய தண்டனைச் சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்தால், அவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

அதன்படி சிறுவர்களுக்கு மது ஊற்றி கொடுத்த நபர்களை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே