கொட்டும் மழையிலும் குளித்த சுற்றுலாப் பயணிகள்

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய அருவியில் மிதமான நீர்வரத்து காணப்படுகிறது. அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் குளித்து மகிழ்ந்தனர்.

ஐந்தருவியில் மட்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு அடித்து வரப்பட்ட கற்கள் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தன. இதில் மூன்று பேரில் தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே