பாதுகாப்பு குறைபாட்டால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கேம் ஸ்கேனர் ( CAM SCANNER ) நீக்கம்!

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள டேஞ்சரஸ் ஆப்ஸ் என்ற பட்டியலில் தற்போது கேம் ஸ்கேனர் ( CAM SCANNER ) என்கின்ற செயலியும் இணைந்து இருக்கிறது. அதனை உடனே மொபைல் போன்களில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் ஆபத்தான செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அண்மையில் டேஞ்சரஸ் ஆப்ஸ் என்ற பெயரில் ஏராளமான செயலிகளை வெளியிட்டு அதனை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கேம் ஸ்கேனர் ( CAM SCANNER ) என்கின்ற செயலியில் மால்வேர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கேம் ஸ்கேனர் ( CAM SCANNER ) என்கின்ற செயலியை லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். கேம் ஸ்கேனர் ( CAM SCANNER ) என்கின்ற செயலி மூலம் ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து அதனுடைய பார்மெட்டை மாற்றி பிறருக்கு அனுப்பலாம். கேம் ஸ்கேனர் ( CAM SCANNER ) என்கின்ற செயலியில் வணிக வருவாய்க்காக ஏராளமான விளம்பரங்கள் இடம் பெறுவதுண்டு.

இதிலுள்ள போலி விளம்பரங்களின் மூலம் மால்வேர் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. TROJAN DROPPER எனும் மால்வேர் இருப்பதாகவும் இதன் மூலம் கேம் ஸ்கேனர் வழியாக பயனர்களின் வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

OCR எனப்படும் OPTICAL CHARACTER RECOGNITION மூலம் ஸ்மார்ட் போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம் இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே