கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு கீழடி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கீழடியில் அடுத்த கட்ட ஆய்வு நடத்த உலக பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்த இருப்பதாகவும், இதில் 11 தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளதாகவும் கூறினார்.