காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தானில் பேரணி

காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை கடந்த மாதம் ஐந்தாம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் அவ்வப்போது போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கராச்சி நகரில் பேரணிக்கு ஜமாத்-இ-இஸ்லாமி என்ற கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து நடந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்ட அவர்கள் பிரம்மாண்ட கொடியையும் ஏந்தி பிடித்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே