நடிகைகள் பலரும் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களுக்கான ரசிகர் வட்டாரத்தை அதிகரித்து வருகிறார்கள்.
பிரபல நடிகைகள் பலரும் தங்களது கவர்ச்சி படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் புதிய வாய்ப்புகளை பெறுவதற்கும், ஏற்கனவே உச்சத்தில் உள்ளவர்கள் தங்களது இடங்களை தக்கவைக்கவும், இதுபோன்ற செயல்களில் இறங்குவது உண்டு.
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்துள்ள நிகிஷா பட்டேல் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிகினி போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்தது.
தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் தமிழில் பெரியநாயகி காண அந்தஸ்தை நோக்கி நகர்ந்து வருகிறார். இதனிடையே ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ள அவர் அங்குள்ள கடற்கரையில் கவர்ச்சிகரமாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அதனை அவரது ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உச்சத்தில் உள்ள நடிகை சமந்தா அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து, அங்கு எடுக்கப்படும் கவர்ச்சி படங்களை இணையத்தில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டவர். சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான “ஓ பேபி” திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து, இந்த வெற்றியை கொண்டாட கணவர் நாக சைதன்யாவுடன் வெளிநாட்டுக்கு பறந்துள்ளார். அங்கு எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சமந்தா.
இவரைப் போன்றே நடிகை இலியானா கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். இவர்கள் வரிசையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்று நடிகை லட்சுமிராய் தற்போது வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் நடிகைகளுக்கு இடையே சிலர் தங்களை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற படங்களை வெளியிடுவது உண்டு. அப்படி நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸுகளை அள்ளி வீசி அவற்றை ஓவர் நைட்டில் ட்ரெண்ட் ஆக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.