ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது தான் தமது லட்சியம் என இளவேனில் வாலறிவன் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251 புள்ளி 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்த இளவேனில் வாலறிவன் தனது சொந்த ஊரான கடலூருக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் வாண வேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பேசிய இளவேனில் வாலறிவன், பல்வேறு பதக்கங்களை வெல்வது மட்டுமில்லாது ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கப் போவதாக தெரிவித்தார்.