தண்ணீரில் 37 ஆசனங்கள்..! அசத்திய மாணவி

விருதுநகரில் ஒன்பது வயது சிறுமி, நீரில் மிதந்தபடி 37 வகையான ஆசனங்களைச் செய்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார்.

தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் நவநீதாஸ்ரீ என்ற அந்த சிறுமி, சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் ஆர்வம் காட்டியதால், பெற்றோர் அவரை முறையான பயிற்சிக்கு அனுப்பிவைத்தனர்.

அதன் மூலம் யோகாசனத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நவநீதாஸ்ரீ பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று வந்துள்ளார்.

தண்ணீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து சாதனை படைக்க நினைத்த மாணவி, அதற்கான கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

அதன் பலனாக தண்ணீரில் மிதந்தபடி திரிவிக்கரம ஆசனம், கூர்மாசனம், ஏகபாத தண்டையாசனம் போன்ற 37 வகையான ஆசனங்களை தொடர்ந்து 5 நிமிடம் 56 வினாடிகளில் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தார்.

இதற்கு முன் ஒரே ஆசனத்தை நீருக்கு மேல் நீண்ட நேரம் செய்ததே சாதனையாக இருந்து வந்தது.

கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என நவநீதாஸ்ரீ கூறினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே