இந்தியாவில் பல மர்மமான இடங்கள் உள்ளன.. மர்மமான கதைகளும், அமானுஷ்ய சம்பவங்களும் அந்த இடங்களில் நடைபெற்றுள்ளன.. அந்த வகையில், இந்தியாவின் அதிகம் பயமுறுத்தும் இடங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..

ராஜஸ்தான், பாங்கர் கோட்டை : 

இது பல ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் பயமுறுத்தும் இடமாக உள்ளது.. ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் பாங்கர். இது ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் நகராட்சியில் அமைந்துள்ளது.

பாங்கரில் உள்ள கோட்டை பார்வையாளர்களிடையே பயத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த கோட்டை குறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கதைகளை கூறுகின்றனர்.. எனினும் அவற்றை நம்பாமல், கோட்டையை பார்வையிட்ட பிறகு பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்.

பெகுன்கோடர் ரயில் நிலையம், மேற்கு வங்கம் : 

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் பெகுன்கோடர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ரயில் நிலையத்தை விட்டு பயணிகள் வெளியேறியதாக கூறப்படுகிறது.. அதன் பிறகு இது ரயில்வே பதிவுகளில் பயமுறுத்தும் இடம் என்று குறிப்பிடப்பட்டது..

வெறிச்சோடிய ரயில் தண்டவாளத்தில் வெள்ளைப் புடவை அணிந்த ஒரு பெண் நடந்து செல்வதை பார்த்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். ஆனால், இந்த வதந்திகளை ஆதாரமற்றது என அரசு நிராகரித்தது.

எனினும் ரயில் சேவை நிறுத்தப்பட்டு 42 ஆண்டுகளுக்கு பின்னர், 2009 இல் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

லம்பி தேஹார் சுரங்கங்கள், உத்தரகண்ட் : 

லம்பி தேஹார் சுரங்கங்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு அடிக்கடி பல லாரி விபத்துகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது..

மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்பகுதியில் இருந்த சுரங்கங்கள் மற்றும் சுண்ணாம்பு குவாரிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன.

இப்பகுதியில் 50,000 தொழிலாளர்கள் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் பலர் நுரையீரல் நோய்களால் இறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்… எனவே இந்த சுரங்கப்பகுதியும் பயமுறுத்தும் இடமாக கருதப்படுகிறது..

மேற்கு வங்கத்தில் உள்ள டவ் ஹில், குர்சியோங் : 

குர்சியோங்கில் உள்ள விக்டோரியா பாய்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் டவ்ஹில் பெண்கள் உறைவிடப் பள்ளி ஆகியவை பல ஆவிகளின் வசிப்பிடங்கள் என்று உள்ளூர்வாசிகளால் நம்பப்படுகிறது. பள்ளிகளைச் சுற்றியுள்ள காடுகளில் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதன் காரணமாக இந்த இடத்தின் மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது…

டிசோசா சால், மும்பை : 

மும்பையில் உள்ள மாஹிம் அருகே உள்ள, டி’சோசா சால் என்ற இடத்தின் உள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றைச் சுற்றி பல கதைகள் உள்ளன.. அந்த கிணற்றில் தண்ணீர் நிரப்பும் போது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

அந்த பெண்ணின் ஆவி, ஒவ்வொரு இரவும் அப்பகுதியில் சுற்றித்திரிவதாக கூறுகின்றனர்.. பலர் வெள்ளை நிற தோற்றத்தைப் பார்த்ததாகவும் தெரிவிக்கின்றனர்.. இதனால் இந்த இடமும் இந்தியாவின் அதிகம் பயமுறுத்தும் இடங்களில் ஒன்றாக உள்ளது..

டுமாஸ் கடற்கரை, குஜராத் : 

குஜராத்தில் உள்ள டுமாஸ் ஒரு தகனம் செய்யும் இடமாக இருந்தது.. உள்ளூர்வாசிகள் அடிக்கடி அப்பகுதியில், குறிப்பாக இரவில் விசித்திரமான குரல்களைக் கேட்பதாக தெரிவிக்கின்றனர்.

டுமாஸ் கடற்கரையின் கருப்பு மணல் மர்மங்களின் பல கதைகளுக்கு காரணமாக அமைந்தது.. இங்கு சுற்றித்திரியும் ஆவிகள் அங்கு வரும் பார்வையாளர்களை அழைத்து, கடற்கரைக்கு அருகாமையில் உள்ள ஆபத்து குறித்து எச்சரிப்பதாக பலர் நம்புகின்றனர்.

ஜதிங்கா, அசாம் : 

அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் 2,500 மக்கள் வசிக்கும் கிராமம் ஜதிங்கா. இது கவுகாத்திக்கு தெற்கே 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தின் சில வாரங்களில் பறவைகள் மர்மமான முறையில் இறக்கின்றன.. இது பல ஆண்டுகளாக நடக்கும் ஒன்றாக இருந்தாலும், இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.. ஆனால் இதற்கு என்ன காரணம் என்று தெரியாததால் இதுகுறித்த மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது..

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே