ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் படம் பரிந்துரை

ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்து ஜோயா அக்தர் இயக்கிய கல்லி பாய் (Gully Boy) திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேர்வாக ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை வீதிகளில் வசிக்கும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

இந்த ஆண்டு ஆஸ்கருக்கு இந்திய படத்தை தேர்வு செய்து அனுப்பும் நடுவர் குழுவுக்கு புகழ்மிக்க பெண் இயக்குனரான அபர்ணா சென் தலைமை தாங்கினார்.

இந்த நடுவர் குழு மற்றொரு பெண் இயக்குனர் ஜோயா அக்தர் இயக்கிய படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்துள்ளது. இப்படம் 92வது ஆஸ்கர் விருதுகளின் வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிடும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே