ஆன்லைன் மூலம் உணவு விநியோகிக்கும் நிறுவனமான சொமாட்டோ 13 விழுக்காடு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
கொரோனா காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் உணவு விநியோகிக்கும் ஓட்டல்களின் எண்ணிக்கை 25 முதல் 40 விழுக்காடு வரை குறையும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு 50 விழுக்காடு ஊதியம் வழங்கப்படும்.
அவர்களுக்கு வேறு பணி கிடைக்கவும் சொமாட்டோ நிறுவனம் உதவி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற ஊழியர்களுக்கு 50 விழுக்காடு வரை ஊதியத்தை குறைக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.