யெஸ் வங்கியின் நிறுவனரும், தலைமை நிர்வாகியாக இருந்தவருமான ராணா கபூர் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
நிதிச் சிக்கலில் உள்ள யெஸ் வங்கியை எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் கையகப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டதாகவும் விரைவில் அது குறித்த தகவல்கள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் யெஸ் வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த 2018ஆம் ஆண்டு யெஸ் வங்கியின் தலைமை நிர்வாகியாக பொறுப்பில் இருந்த ராணா கபூர் கடன் வழங்கியதில் விதிமீறல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவரை பதவி விலகக் கோரி ரிசர்வ் வங்கி எச்சரித்தது.
இதனைத் தொடர்ந்து ராணா கபூர் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.