தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நள்ளிரவில் பெய்த இந்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி கதிகலங்கி போயினர்.

சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு 2 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வட கடலோர மாவங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே