#Valimai : நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வைக்கு பின்போனிகபூர் தயாரிக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு நடக்கும் வேளையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், சென்னையின் புறநகர் பகுதிகளில் வலிமை படத்தில் ஷுட்டிங் நடைபெற்று வந்தது.

அதன் பின் தற்போது ஹைதரபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கு ரசிகர்கள் சிலர், அஜித்-யை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில், அஜித் கண்ணாடி அணிந்து நீல நில டி-ஷர்ட் அணிந்துள்ளார். அத்துடன் பிட்டாக இருக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அஜித்-க்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

எனவே தற்போது பகிரும் புகைப்படத்தில் அஜித்திற்கு ஏற்பட்டுள்ள காயத்தை ரசிகர்கள் சுட்டிக்காட்டி “படத்திற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல” என்று பதிவிட்டு வருகின்றனர்.

அத்துடன், #Valimai என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே