உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு!

கரோனாவால் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் இதுவரை 4,28,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 1,09,241 பேர் குணமடைந்துள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டி 19,101 ஆக உள்ளது. இன்னும் 2,99,875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக இத்தாலியில் 6,820 பேர் பலியாகியுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 69,176 ஆக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே