இன்று இரவு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று இரவு 7 மணிக்கு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றவிருக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை 23 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மதுரையில் இன்று காலை மரணம் அடைந்ததன் மூலம் தமிழகத்தில் முதல் பலி பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து முதல் நாளான இன்றே, சில முக்கிய மாற்றங்களும் அறிவிக்கப்பட்டன. 

அதாவது தேநீர்க்கடைகளை மூடவும், தனியார் மற்றும் சமூக அமைப்புகள் சமைத்த உணவை பொதுமக்களுக்கு வழங்கவும் தடை விதிக்கப்பட்டது.

கரோனா பாதிப்பு எழுந்த நிலையில், நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை உரையாற்றிய நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தமிழக மக்களிடம் உரையாற்றவிருக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே