உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை உக்கிரம் : 12.77 கோடி பேர் பாதிப்பு; 27.95 லட்சம் பேர் மரணம்!!

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 933- ஆக உயர்ந்துள்ளது.சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னமும் கட்டுடங்காமல் பரவி வருகிறது.  தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  
எனினும்,  2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.77- கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27.95 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 961- ஆக உள்ளது. வைரஸ் பரவியவர்களில் 2.20 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93,600-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும்  இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,57,785 பேராக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவிற்கு ஒரே நாளில் 472 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனாவிற்கு 5,62,488 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 2,34,09,102 பேர் குணமடைந்துள்ளனர்

பிரேசிலில் ஒரே நாளில் 44,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,53,4,688 பேராக உயர்ந்துள்ளது. 1,605 பேர் ஒரே நாளில் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனாவால் மொத்தம் 3,12,299 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 68,206 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,20,39,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,13,53,727 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 295 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். மொத்தம் 161,881 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே