தமிழகத்தில் தொடர்ந்து 2,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியது. தற்போது வரை கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தநிலையில் தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த ஒரீரு வாரங்களாக அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 8,79,473-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 84,927 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,270 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 8,53,733 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 833 பேருக்கும், செங்கல்பட்டில் 188 பேருக்கும், கோயம்புத்தூரில் 180 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே