தமிழகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்…!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாணவிகள் முளைப்பாரி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதைப்பந்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், பெண்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அளித்து, முதன்மை மாநிலமாக திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மகளிர் கல்லூரி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாதனை முயற்சியாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்து 20 பெண்கள், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

இதனை தொடர்ந்து 120 பெண்கள் தொடர்ச்சியாக 20 நிமிடம் தேவர் ஆட்டம் ஆடி அசத்தினர்.

இந்த சாதனை நிகழ்வில், பெரியகுளத்தை சுற்றியுள்ள 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், கோலப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்டவைகளில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கழிவறை இல்லாமல் தவிக்கும் கிராமப்புற பெண்களின் சிரமங்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே