மகளிர் தினத்தில் வரலாறு படைக்குமா இந்திய மகளிர் கிரிக்கெட் அணி?

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வரும் இந்திய மகளிர் அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

மெல்போர்னில் இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவின் பேட்டிங்கையும், பூனம் யாதவின் பந்துவீச்சையும் பெரிதும் நம்பியுள்ளது.

எனினும் அனைத்து வீராங்கனைகளும் ஒருங்கிணைந்து திறமையை வெளிக்காட்டினால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை வசப்படுத்தும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரையிறுதி போட்டிகள் மழையால் பாதித்த நிலையில், இறுதிப்போட்டியில் மழைக்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே