உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழ்த்திரையுலகின் வலிமையான சில பெண் கதாபாத்திரங்களைப் பற்றிய செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்.

திரையுலகம் எப்போதும் கதாநாயகனின் களம் என்பார்கள். வர்த்தக ரீதியான படங்களில் டூயட் பாட மட்டும் கதாநாயகிகள் பயன்படுத்தப்பட்ட பல படங்களைப் பார்த்திருப்போம் .

ஆனால் எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் முதல் விஜய் நடித்த பிகில் வரை பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்த திரைப்படங்களும் ஏராளம்.

நடிப்பில் உச்சம் தொட்டவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் புடம் போட்ட பொன்னாக ஜொலித்தன.

 வசூலில் சாதனைகளை படைத்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களுக்கும் பெண் கதாபாத்திரங்கள் தான் வெற்றிக்கு உதவியாக இருந்துள்ளன.

ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பாலு மகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா, கணேசராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் வடிக்கப்பட்ட பெண் பாத்திரங்கள் என்றும் மறக்க முடியாதவையாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தன

பெண்கள் கண்ணீர் வடிப்பவர்கள் அல்ல, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாதிக்கக்கூடியவர்கள் என்று திரையுலகில் நாம் சந்தித்த பெண் பாத்திரங்கள் வாழ்ந்துக் காட்டியுள்ளனர்.

தாயாகவும் காதலியாகவும் மனைவியாகவும் மகளாகவும் சகோதரியாகவும் பெண்கள் வடித்த சித்திரங்கள் வாழ்க்கையைப் போலவே திரையிலும் நம்முடன் நீங்காமல் இணைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே