பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகள் சனா இந்திய குடியுரிமைச் சட்ட மசோதாவை எதிர்க்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்திய குடியுரிமைச் சட்ட மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க அரசு இதை மும்முரமாக செயல்படுத்தியது.

இந்த சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களும் குரல் எழுப்பினர்.

மேலும், மாணவர்கள் போராடத் தொடங்கினர். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட ஆரம்பித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராகவும், ஜாமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

ஹிந்தி திரையுலகம், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவிட்டுவருகின்றன.

இருப்பினும், ரஜினிகாந்த், சச்சின், சவுரவ் கங்குலி, ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான் கான் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்கள் இந்த விவகாரங்களில் இதுவரையில் எந்த கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை.

இந்தநிலையில், பி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sana Instagram Post

அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில்,

 • இன்று, நான் முஸ்லிம் அல்ல கிறிஸ்தவன் அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளும் நபர்களே நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
 • இவர்கள் ஏற்கனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட இளைஞர்களையும் குறிவைத்து வருகிறார்கள். நாளை இது உங்களின் மீதும் பாயும்.
 • உங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள்.
 • பெண்கள் அணியும் பாவாடை இப்படித்தான் இருக்க வேண்டும்.
 • இறைச்சி சாப்பிடக்கூடாது,
 • மது அருந்துவது கூடாது,
 • வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது,
 • வருடாந்திர யாத்திரையாக கோயிலுக்குச் செல்லக் கூடாது,
 • அவர்கள் கூறும் பற்பசையை தான் பயன்படுத்த வேண்டும்,
 • பொது இடங்களில் கை குலுக்குதல் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள முத்தம் கொடுப்பது இதற்கு பதிலாக நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று தான் முழங்க நேரிடும்.
 • ஒருவரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்தியா உயிர்ப்புடன் இருக்கும் என்று நாம் நம்பினால் இதனை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய “தி எண்ட் ஆஃப் இந்தியா” (The End of India) என்ற புத்தகத்திலுள்ளவற்றை பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே